அபே ஜன பல என பெயரிடப்பட்ட கட்சியூடாக கிடைக்கப் பெற்றுள்ள தேசியப் பட்டியல் ஆசனத்தை பகிர்ந்து கொள்வதில் ஞானசார - அத்துராலியே ரதன தேரர்கள் மத்தியில் முறுகல் நிலவி வருவதாக பொது பல சேனா தகவல்கள் தெரிவிக்கின்றன.
குருநாகல் மாவட்டத்தில் ஞானசார போட்டியிட முயன்ற போதும் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டிருந்தது. இதேவேளை, குறித்த கட்சியின் தலைவராக அத்துராலியே ரதன தேரரே இருக்கிறார். இந்நிலையில் தேசியப் பட்டியல் ஆசனத்தை யாருக்கு வழங்குவது என்பதில் இரு தரப்பும் முரண்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியும், அபே ஜன பல கட்சியும் தேர்தலில் தலா ஒரு தேசியப்பட்டியல் ஆசனத்தை மாத்திரம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment