நடந்து முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகளில் தமது கட்சி பெற்றிருக்கும் பெறுபேறுகள் திருப்தியாக இல்லையென தெரிவிக்கின்ற தேசிய மக்கள் சக்தி தலைவர் அநுர குமார திசாநாயக்க, நாடாளுமன்றில் ஆசனங்கள் குறைவாக இருந்தாலும் வெளியேயும் பலமான எதிர்க்கட்சியாக மக்கள் நலனை முன்நிறுத்தி செயற்பட முடியும் என தெரிவித்துள்ளார்.
கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் வெற்றி பெறத் தவறியுள்ள நிலையில் தேசியப் பட்டியல் ஆசனமொன்றுடன் இம்முறை மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுள்ளது தேசிய மக்கள் சக்தி. இந்நிலையில், மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கான போராட்டத்தை நாடாளுமன்றுக்கு வெளியேயிருந்தும் தமது தரப்பு முன்னெடுக்கும் என அவர் விளக்கமளித்துள்ளார்.
பொதுவாக, சமூக - அரசியல் குழப்பங்களின் போது இடதுசாரிகளின் கருத்துக்களை பெரிதும் வரவேற்கும் மக்கள் தேர்தல் காலங்களில் அதற்குரிய போதிய வரவேற்பை வழங்கத் தவறி வருவதாக தீவிர இடதுசாரிகள் சுட்டிக்காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment