எதிர்வரும் 20ம் திகதி கூடவுள்ள இலங்கையின் 9வது நாடாளுமன்றின் கன்னியமர்வின் போது உறுப்பினர்கள் முகக் கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொரோனா அபாயம் முற்றாக நீங்காத நிலையில் இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. எனினும், சமூக மட்டத்தில் கொரோனா பரவல் இல்லையென்றே சுகாதார அமைச்சு தெரிவிக்கிறது.
சிறுபான்மை சமூக கூட்டணி கட்சிகளின் உதவியுடன் அரசாங்கம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுள்ளதால் பெரும்பாலான சட்டங்கள் இலகுவாக நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment