மஹிந்த ராஜபக்ச இன்றைய தினம் பிரதமராக மீண்டும் பதவிப்பிரமாணம் செய்து கொண்டுள்ள நிலையில் எதிர்வரும் புதன் கிழமை புதிய அமைச்சரவை நியமனமும் பதவிப்பிரமாணமும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை கண்டியிலேயே இந்நிகழ்வு இடம்பெறவுள்ளதாகவும் ஜனாதிபதி தலைமையேற்பார் எனவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
145 ஆசனங்களை வென்றுள்ள பெரமுன, தமிழ் - முஸ்லிம் சமூக கட்சிகளுடன் இணைந்தே மூன்றிலிரண்டு பெரும்பான்மையை நிரூபிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment