பாரிய சவாலை வெற்றிகரமாக சமாளித்த போதிலும் வெகுமதிகளை அறுவடை செய்ய பொறுமையுடனான காத்திருப்பு அவசியம் என கருத்து வெளியிட்டுள்ளார் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன.
பொலன்நறுவ மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளுடன் தெரிவான போதிலும் மைத்ரிபால சிறிசேனவுக்கு அமைச்சுப் பதவியெதுவும் வழங்கப்படவில்லை. முன்னாள் ஜனாதிபதி என்கிற வகையில் முன் வரிசையில் அமர்ந்த போதிலும் மாவட்ட மக்களுக்கு சேவை செய்வதற்காகவே அரசியலில் தொடர்வதாக கூறும் அவருக்கு அதற்கேற்ப மரியாதை வழங்கப்படவில்லையென ஆதரவாளர்கள் அங்கலாய்க்கின்றனர்.
இந்நிலையிலேயே, மைத்ரி மேற்காணும் படத்துடன் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment