தாபம் சிங்கள சமூகத்துக்காகவே போராடியதாகவும், விரும்பியபடி சிங்கள அரசு அமைந்து விட்டதனால் தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்குப் பின் செல்லவில்லையெனவும் ஊடக சந்திப்பு நடாத்தி தெரிவிக்கும் ஞானசார, பின்னணியில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாக தெரிவிக்கிறார் அபே ஜன பல கட்சியின் தேசியப் பட்டியலை தனதாக்கிக் கொண்ட விமலதிஸ்ஸ தேரர்.
விமலதிஸ்ஸ தேரரின் நடவடிக்கை அத்துராலியே ரதன தேரருடன் இணைந்து நடாத்தப்படும் நாடகம் எனவும் ஞானசார சந்தேகிப்பதாகவும் தொலைபேசியூடாக தமக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவிக்கிறார்.
இதேவேளை, தமது கட்சி சார்பில் ஒருவர் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகி, இராஜினாமா செய்த பின்னரே ஞானசார நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட முடியும் எனவும் ரதன தேரர் சட்ட விளக்கம் கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment