காலி - மாத்தறை மாவட்டத்தின் பல தொகுதிகளில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றியீட்டி முன்னணியில் திகழ்கிறது.
இறுதியாக ஹக்மன, தெனியாய மற்றும் ரத்கம முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அனைத்து இடங்களிலும் பொதுஜன பெரமுன முன்னணியிலும் சமகி ஜன பல வேகய இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளது.
தேசிய அளவில் இதுவரையான முடிவுகளின் பிரகாரம் பெரமுன 637,938 வாக்குகளைப் பெற்று 68 வீத மக்கள் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதுடன் சமகி ஜன பல வேகய 159, 312 வாக்குகளுடன் 17.09 வீத மக்கள் அங்கீகாரத்தையும், தேசிய மக்கள் சக்தி 53,289 வாக்குகளுடன் 5.72 வீத அங்கீகாரத்தையும், ஐக்கிய தேசியக் கட்சி 24,285 வாக்குகளுடன் 2.60 வீத அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது.
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி பாரிய சரிவை சந்தித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment