பெரமுனவில் உள்ள திருடர்களுடன் கை கோர்த்துக் கொண்டு ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்சவுக்கு நாட்டை ஒரு போதும் முன்னேற்ற முடியாது என்கிறார் மனோ கணேசன்.
சமகி ஜன பல வேகயவுடன் இணைந்து நாட்டை அபிவிருத்தி செய்வதே அவருக்கு உள்ள சிறந்த தெரிவென கூறும் மனோ, கடந்த தடவை தேர்தலில் தோல்வியடைந்தவர்களுக்கும் தேசிய பட்டியலில் இடம் கொடுத்தது, அரசியல் புள்ளிகளின் நெருக்கமானவர்களுக்கு மாத்திரம் முக்கிய பதவிகளைக் கொடுத்தது போன்ற பல்வேறு தவறுகளை ஐ.தே.க செய்தமையே அக்கட்சியின் தோல்விக்குக் காரணம் எனவும் தெரிவித்துள்ளார்.
சஜித் தலைமையிலான அணி புதிய மாற்றங்களைக் கொண்டு வரும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment