அலிசப்ரிக்கு எதிர்பார்த்தபடி நீதியமைச்சர் பதவி! - sonakar.com

Post Top Ad

Wednesday, 12 August 2020

அலிசப்ரிக்கு எதிர்பார்த்தபடி நீதியமைச்சர் பதவி!


பெரமுன தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, எதிர்பார்த்தபடி நீதியமைச்சராக பதவியேற்றுள்ளார்.


இதேவேளை, நாமல் ராஜபக்ச இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் முக்கிய அமைச்சு பதவிகள் ராஜபக்ச குடும்பத்தினரிடமே பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.


இதுவரை 25 கபினட் அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதி வசம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment