பண்டைய அரச மண்டபத்தை இடித்த குற்றச்சாட்டின் பின்னணியில் குருநாகல் மேயரை கைது செய்வதற்கு இடைக்கால தடை விதித்துள்ளது மேன் முறையீட்டு நீதிமன்றம்.
குற்றச்சாட்டின் மீதான மனு முழுமையாக விசாரிக்கப்படும் வரை அவரைக் கைது செய்யத் தடை விதிக்கபட்டுள்ள அதேவேளை பொலிசார் விசாரணைகளை சுயாதீனமாக மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேயரைக் கைது செய்யுமாறு இம்மாதம் 6ம் திகதி குருநாகல் மஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment