தனது 34வது வயது நிறைவினை முன்னிட்டு வார இறுதியில் அதனைக் கொண்டாடியிருந்த வேக ஓட்டக்காரர் உசைன் போல்ட் கொரோனா தொற்றுக்குள்ளாகி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
தனது வீட்டிலேயே போல்ட் தனிமைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை, கடந்த வெள்ளிக் கிழமை உலகின் முக்கிய பல விளையாட்டு வீரர்கள் குறித்த கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா அறிகுறிகள் இல்லாத நிலையிலேயே அவருக்கு தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment