இந்தியாவுக்கு சிகிச்சைக்காக சென்று திரும்பியிருந்த குருநாகலயைச் சேர்ந்த முஸ்லிம் பெண்ணொருவர் நேற்றிரவு (22) கொரோனா தாக்கத்தினால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று மாலை வேளையில் குடும்பத்தைச் சேர்ந்த ஐவரை பார்வையிட வருமாறு ஐ.டி.எச்சிலிருந்து அழைப்பு வந்திருந்த நிலையில் பதற்றம் உருவாகியிருந்தது. எனினும், அவருக்கு தொடர்ந்தும் சிகிச்சையளிப்பதாகவே அப்போது கூறப்பட்டிருந்தது.
ஆயினும், இன்று 23ம் திகதி அவர் நேற்றிரவு உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுவதுடன் பெண்ணின் உடலை தகனம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. ஜனாஸா தொழுகைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் இத்துடன் 12 கொரோனா உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது. புற்று நோயால் ஏலவே பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்தியாவுக்கு சிகிச்சைக்காக சென்று திரும்பியிருந்ததாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment