கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக ஏ.சி.அஹமட் அப்கர் இன்று திங்கட்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
ஓட்டமாவடி பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராக கடமையாற்றிய திருமதி நிஹாரா மௌஜூத் ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்திற்கு பிரதேச செயலாளராக இடமாற்றம் பெற்றுச் சென்றதற்கு பதிலாகவே ஏ.சி.அஹமட் அப்கர் பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏ.சி.அஹமட் அப்கர் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செலகத்தின் உதவி பிரதேச செயலாளராக கடமையாற்றியது குறிப்பிடத்தக்கது.
- எஸ்.எம்.எம்.முர்ஷித்
No comments:
Post a Comment