கல்குடா: ரயில் விபத்தில் ஒருவர் மரணம் - sonakar.com

Post Top Ad

Saturday, 15 August 2020

கல்குடா: ரயில் விபத்தில் ஒருவர் மரணம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பிரதேசத்தில் புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிர் இழந்த சம்பவம் இன்று சனிக்கிழமை (15.08.2020) மாலை இடம்பெற்றுள்ளதாக கல்குடா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சந்தன விதானகே தெரிவித்தார்.


மட்டக்களப்பில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த எண்ணெய் ஏற்றும் புகையிரதத்தில் இன்று மாலை 04.15 மணியளவில்  இவ் விபத்து இடம் பெற்றுள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர்.


மட்டக்களப்பில் இருந்து பாசிக்குடா நோக்கி பயணித்த பட்டா ரக வாகனம் தனது வேக கட்டுப்பாட்டை இழந்து கல்குடா புகையிரத நிலைத்திற்கு அருகில் உள்ள பாதுகாப்பு கடவையை உடைத்துக் கொண்டு புகையிரதத்தில் மோதுண்டுள்ளது.


இந்த விபத்தில் வாகனம் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் வாகனத்தின் சாரதியான செபஸ்தியன் அருள்நாதன் (வயது – 48) என்பவர் காயங்களுடன் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.


இவ் விபத்து தொடர்பாக கல்குடா பொலிஸார் விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


-எஸ்.எம்.எம்.முர்ஷித

No comments:

Post a Comment