பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக அறிவிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரிக்காக விசேட பிரார்த்தனை நிகழ்வொன்று வாழைத்தோட்டத்தில் இயங்கி வரும் மர்ஹும் நியாஸ் மௌலவியின் மதரசாவில் இடம்பெற்றது.
அத்துடன், புதுக்கடை பெரமுன இளைஞர் அமைப்பினால் அவருக்கு பாற்சோறு பரிமாறலுடன் வரவேற்பும் அளிக்கப்பட்டது.
பெரமுனவுக்கு முஸ்லிம்கள் கணிசமாக வாக்களிக்காவிட்டாலும் ஜனாதிபதி இன - மத பேதமற்றவர் என்பதை நிரூபித்திருப்பதாகவும் முஸ்லிம்களும் இனி தேசிய ரீதியில் பின்னிப் பிணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் அலி சப்ரி அஙகு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
-அஸ்ரப் ஏ சமத்
No comments:
Post a Comment