புதிய அமைச்சரவை இன்று பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச தலைமையில் கூடவுள்ளது.
நாளைய தினம் நாடாளுமன்ற கன்னியமர்வு இடம்பெறவுள்ள நிலையில் இன்று அமைச்சரவை கூடவுள்ளதுடன் முக்கிய திட்டங்கள் கலந்தாலோசிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டின் வரவு-செலவுத் திட்டம் ஒன்றை விரைவாக முன் வைப்பதா அல்லது தொடர்ந்தும் இடைக்கால வரவு - செலவுத் திட்டத்தில் இயங்குவதா என்றும் இன்றைய தினம் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment