விஜேதாச ராஜபக்சவுக்கு வழங்கப்படவிருந்த உயர் கல்வி இராஜாங்க அமைச்சர் பதவியை அவர் முற்றாக நிராகரித்துள்ள நிலையில் அதற்குத் தகுதியான ஒருவரை அரச உயர் மட்டம் தேடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏலவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு பதவியில்லாத நிலையில் அக்கட்சியினர் சுயாதீன குழுவாக இயங்குவது தொடர்பில் ஆலோசித்து வருகின்றனர். இதேவேளை, மாற்றீடாக வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களைக் கவர்ந்திழுப்பதற்கும் பதவிகளைப் பயன்படுத்தும் 'பேரம்' பேசல்கள் ஆரம்பமாகியுள்ளன.
இந்நிலையில், அரசியல் சட்டத்திருத்தத்தின் ஊடாக மேலும் அமைச்சரவையை விரிவாக்கும் எண்ணமிருப்பதாகவும் அதனடிப்படையில் அரசுக்குத் தேவையான மூன்றிலிரண்டு பலத்தைத் தரும்படியும் பெரமுன தரப்பு பேச்சுவார்த்தைகளை நடாத்தி வருகின்றமையும், அதீத பிரயத்தனம் மேற்கொண்டும் சிறுபான்மை சமூக கட்சிகளின் உதவியுடனேயே தற்சமயம் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை அரசாங்கம் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment