தனக்கு இராஜாங்க அமைச்சர் பதவி தரப்பட்டது கொஞ்சம் கூட திருப்தியாக இல்லையென தனது பதவியேற்பின் போதே தெரிவித்துள்ளார் இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க.
பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்த நிலையிலேயே ரொஷான் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எனினும், மஹிந்த - பசில் - கோட்டாபே ராஜபக்ச ஆகியோருக்கு தான் வைத்திருக்கும் கௌரவத்தின் நிமித்தமே பதவியையேற்றுக்கொள்வதாக அவர் மேலும் விளக்கமளித்துள்ள அதேவேளை, விஜேதாச இராஜபக்ச நியமனத்தின் போதே புறக்கணித்து எழுந்து சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment