தான் அமைச்சுப் பதவி வகித்த போது எவ்வித நிதி முறைகேடுகளிலும் ஈடுபட்டதில்லையென தெரிவிக்கிறார் சமகி ஜன பல வேகய தலைவர் சஜித் பிரேமதாச.
பொது மக்கள் பணத்தில் தேநீர் கூட தான் குடித்ததில்லையென தெரிவிக்கின்ற அவர், தன்னைப் பற்றி எதையுமே சொல்ல முடியாத எதிராளிகள் தற்போது தான் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக சேறு பூச முனைகிறார்கள் என விளக்கமளித்துள்ளார்.
தன் மீதான சேறு பூசல்கள் விளம்பரத்தையே பெற்றுத் தருகிறது எனவும் மக்கள் நலத் திட்டங்களை முன்னெடுப்பதில் தொடர்ந்தும் கடுமையாக உழைக்கப்போவதாகவும் அவர் மேலும் தெரிவிப்பதோடு தாம் ஆட்சிக்கு வந்தால் ஏப்ரல் - மே மாத மின் கட்டணங்களை மீளத் தரப்போவதாகவும் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment