அபே ஜன பல கட்சியின் தேசியப் பட்டியலுக்குத் தன்னைத் தானே நியமித்துத் தலைமறைவாகியுள்ள விமலதிஸ்ஸ தேரர், ஞானசார குழு தான் சார்ந்த விகாரையின் துறவிகளைத் தாக்கியுள்ளதாக முறையிட்டுள்ளார்.
இராணுவம் பொலிசார் எல்லாம் ஞானசாரவுக்கு ஆதரவாகவே செயற்படுவதாக தெரிவிக்கின்ற அவர், விகாராதிபதியைக் கட்டி வைத்து தாக்குதல் நடாத்தி வருவதாகவும் தெரிவிக்கிறார்.
எவ்வாறாயினும், தேசியப்பட்டியல் உறுப்பினரை நியமிக்கும் முழு அதிகாரமும் தனக்கே இருப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment