கொலை, போதைப் பொருள் கடத்தல் என பல்வேறு குற்றச்சாட்டுகளுடன் தொடர்பு பட்டிருந்த எஸ்.எப். லொக்கா என அறியப்படும் பாதாள உலக பேர்வழி சுட்டுக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
2015ல் கராத்தே பிரபலம் வசந்த கொய்சாவை கொலை செய்து பிரபலமான குறித்த நபர் முன்னாள் இராணுவத்தில் பணியாற்றி தப்பியோடியிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று தஹயாகம சந்தியில் காரில் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment