இலங்கையில் இயங்கும் முக்கிய இரு பௌத்த பல்கலைக்கழகங்களை கல்வியமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச.
இலங்கை பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் மற்றும் ஷ்ராவக்க பிக்குகள் கல்லூரி ஆகிய இரு நிறுவனங்களையுமே இவ்வாறு கல்வியமைச்சின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
ஜனாதிபதியுடனான மகா சங்கத்தினரின் ஐந்தாவது தொடர் சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றிருந்த நிலையில் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment