போதைப் பொருள் இன்றி மூன்று கைதிகள் தற்கொலை - sonakar.com

Post Top Ad

Wednesday, 26 August 2020

போதைப் பொருள் இன்றி மூன்று கைதிகள் தற்கொலை

சிறைச்சாலையில் மதுபானம் மற்றும் போதைப் பொருள் கிடைக்காத நிலையில் கடந்த ஒரு வாரத்திற்குள் மாத்திரம் மூன்று கைதிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக சிறைச்சாலைகள் நிர்வாகம் தெரிவிக்கிறது.


கொழும்பில் இருவரும் நீர்கொழும்பில் ஒருவருமாக இவ்வாறு போதைப்பொருளுக்கு அடிமையாகியிருந்த கைதிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள அதேவேளை தற்சமயம் சிறைச்சாலைகளுக்குள் போதைப் பொருள் கடத்தலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


குறித்த நபர்கள் விளக்கமறியலில் இருந்ததால், குற்றவாளிகளாக இன்னும் அறிவிக்கப்படவில்லையெனவும், அவ்வாறில்லாத நிலையில் புனர்வாழ்வு மையங்களுக்கு அனுப்ப இயலாது எனவும் சிறைச்சாலை நிர்வாகம் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment