தமது கட்சிக்குக் கிடைத்த தேசியப் பட்டியலை ஞானசாரவுக்கு வழங்குவதற்காக அபே ஜன பல கட்சி முடிவெடுக்க முரண்பட்டுக் கொண்டிருந்த வேளையில் தனது பெயரை தேசியப் பட்டியலுக்கு பரிந்துரைத்து தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பி விட்டுத் தலைமறைவாகியுள்ள விமலதிஸ்ஸ தேரரை தேடி மானல்லை பகுதி வீடொன்றில் பொலிசார் தேடலில் ஈடுபட்டுள்ளனர்.
கேகாலை மாவட்டத்தில் குறித்த கட்சி சார்பில் போட்டியிட்ட நபர் ஒருவரின் வீட்டுக்கு தேரர் வந்திருப்பதாக தகவல் கிடைத்ததன் பின்னணியில் பொலிசார் அங்கு விரைந்துள்ளனர். எனினும், அவ்வேளையில் தேரர் மீண்டும் தப்பியோடி விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் 14ம் திகதிக்கு முன்பாகத் திரும்பாது விடின் ஞானசார தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்ல முடியாத சூழ்நிலை உருவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment