அபே ஜன பல கட்சியின் தேசியப்பட்டியல் விவகாரத்தின் பின்னணியில் அத்துராலியே ரதன தேரர் மீது கடத்தல் குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இன்று ரதன தேரரைத் தேடி விசேட பொலிஸ் குழுவொன்று அவரது விகாரைக்குச் சென்றுள்ள போதிலும் ரதன தேரர் தப்பியோடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈற்றில், ரதன தேரரை 'பேச்சுவார்த்தைக்கு' வருமாறு அவருக்கு தொலைபேசியூடாக தகவல் வழங்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
கட்சியின் செயலாளர் விமலதிஸ்ஸ தேரரை இயக்குவது ரதன தேரர் எனவும் தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை தற்போது கடத்தியதும் ரதன தேரர் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமையும், எவ்வாறாயினும் ஞானசாருக்கு தேசியப்பட்டியல் நியமனத்தைப் பெற்றுக்கொள்வதற்கு தீவிர முயற்சிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment