தன்னால் ஒரு போதும் பொம்மை அமைச்சராக இருக்க முடியாது என விசனம் வெளியிட்டுள்ளார் விஜேதாச ராஜபக்ச.
அமைச்சரவை நியமனத்தின் போது கபினட் அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவியை எதிர்பார்த்துச் சென்ற விஜேதாசவுக்கு இராஜாங்க அமைச்சர் பதவியொன்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், அதனை ஏற்காது சபையை விட்டு வெளியேறியிருந்தார் விஜேதாச.
இந்நிலையிலேயே, தான் ஒரு போதும் அவ்வாறான பொம்மை அமைச்சுப் பதவிகளை ஏற்கப் போவதில்லையென தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment