இலங்கையில் இருப்பதற்கான விசா இன்றித் தங்கியிருந்த குற்றச்சாட்டில் மூன்று நைஜீரிய பிரஜைகளை கைது செய்துள்ளதாக பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன் குறித்த நபர்களுக்கு உதவியதாக கருதப்படும் இரு இலங்கையரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்கிஸ்ஸயில் தங்கியிருந்த நிலையில் குறித்த நபர்கள் பற்றி தகவல் கிடைக்கப் பெற்றதாகவும் அதனையடுத்து சுற்றி வளைத்த பொலிசார் அவர்களைக் கைது செய்துள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment