பசல் ராஜபக்சவுக்கு நாட்டின் பிரதமராக வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையென தெரிவிக்கிறார் குமார வெல்கம.
அதற்கேற்ப 20ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக காய் நகர்த்தல்கள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவிக்கிறார். கோட்டாபே ராஜபக்ச ஜனாதிபதி வேட்பாளராவதை எதிர்த்து கட்சியை விட்டு விலகிய குமார வெல்கம தற்போது சமகி ஜன பலவேகயவுடன் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினராகியுள்ளார்.
இந்நிலையில், ராஜபக்ச சகோதரர்கள் நாட்டின் அரசியலமைப்பை வேறு வகையில் மாற்றுவார்கள் என ஆரூடம் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment