நீதியமைச்சின் கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார் புதிய நீதியமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி.
உதய கம்மன்பில, வழக்கறிஞர்கள், சமய தலைவர்கள், நீதியமைச்சின் மேலதிக செயலாளர் உட்பட முக்கிய பிரமுகர்கள் புடை சூழ கையொப்பமிட்டு தனது கடமைகளை பொறுப்பேற்றிருந்தார்.
இதன் போது உரையாற்றிய அவர், நாட்டின் அரசியலமைப்புக்கோ நாட்டு மக்களுக்கு எதிராகவோ சிறு துளி தவறு கூட தம் பக்கத்தில் இடம்பெறாது எனவும் தனக்கு இப்பதவியை வழங்கிய ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்திருந்தார்.
இரண்டு மணித்தியாலத்துக்கு ஒரு தடவை இடம்பெறும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், போதைப் பொருள் வர்த்தகம் போன்ற பல்வேறு முக்கிய விடயங்களில் தான் கவனம் செலுத்தவுள்ளதாகவும் அவர் அங்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment