நாட்டின் அரசியலமைப்புக்கு பாதுகாவலனாக இருப்பதோடு எந்த சந்தர்ப்பத்திலும் ஐக்கியத்திற்கும் சகோதரத்துவத்திற்கு எதிராக செயற்பட போவதில்லையென தெரிவிக்கிறார் புதிய நீதியமைச்சர் அலிசப்ரி.
அமைச்சராக பதவியேற்ற பின் நேற்றைய தினம் கண்டி - லைன் பள்ளியில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர், நான் ஜனாதிபதி முன்னிலையில் நீதி அமைச்சராகப் பதவியேற்றது ஒரு குறித்த சமூகத்திற்காக மட்டும் அல்ல, ஒரு சனக் கூட்டத்திற்கு அல்ல, இது முழுநாட்டுக்காக வழங்கப்பட்ட பதவியாகும் என்றும் தெரிவித்தார்.
இதன் போது, முஸ்லிம் சமூகத்தில் இருக்கும் அடிப்படைவாதத்தைக் களையாது யாரும் நிம்மதியாக இருக்க முடியாது எனவும் அதற்கான ஆவன செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா பொதுஜனப் பெரமுனவின் முஸ்லிம் சம்மேளனத்தின் தேசிய அமைப்பாளர் ஏ. எல். எம். உவைஸ்? பாக்கிஸ்தான் நாட்டு வதிவிடப் பிரதிநிதியும் பள்ளிவாசலின் நிர்வாகத் தலைவருமான அப்சல் மரைக்கார்? மத்திய மாகாண அரசியல் ஒன்றியத் தலைவர் சட்டத்தரணி பஸ்லி வாஹிட் மற்றும் சர்வ மதத் தலைவர்களும் கலந்து கொண்டனர். கண்டி மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபைத் தலைவர் மௌலவி எச் உமர்தீன் விசேட பிரார்த்தனையை நடாத்தி வைத்தார்.
-இக்பால் அலி
No comments:
Post a Comment