ஜனாதிபதி கோட்டாபே ராஜபக்ச - பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கப் போவதாக தீர்மானித்துள்ளது முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபாலி சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி.
தனித்தும், பெரமுன ஊடாகவும் போட்டியிட்டு 14 ஆசனங்களைக் கைப்பற்றிய சுதந்திரக் கட்சி பிரமுகர்கள் இன்று கூடி இவ்வாறு முடிவெடுத்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மைத்ரி பொலன்நறுவ மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்றுள்ள அதேவேளை ஏனையோரும் தமது மாவட்டங்களில் கணிசமான வாக்குகளைப் பெற்றுள்ளனர். கட்சி மறு சீரமைப்பு பணிகளும் இடம்பெறவுள்ளதாக சுதந்திரக் கட்சியினர் தெரிவிக்கின்ற அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சி படு தோல்வியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment