இன்று முதல் நான்கு தினங்களுக்கு தலா ஒரு மணி நேர மின் வெட்டு நாடளாவிய ரீதியில் அமுலுக்கு வந்துள்ளது.
நேற்றைய தினம் மின்சார விநியோகம் சில மணி நேரங்கள் முற்றாகத் தடைக்குள்ளாகியிருந்த நிலையில் இவ்வாறு ஒரு மணி நேர திட்டமிட்ட மின் வெட்டு அமுலுக்கு வந்துள்ளது.
மின் விநியோக பொறிமுறையை சீர் செய்வதற்கான நடவடிக்கையாகவே இவ்வாறு மின் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment