களுத்துறை சிறைச்சாலையிலிருந்து இன்று அதிகாலை மூன்று கைதிகள் தப்பியோடியுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
23 - 32 வயது, போதைப்பொருள் தொடர்பில் கைதாகியிருந்த நபர்களே இவ்வாறு தப்பியோடியுள்ளதாகவும் விசேட குழுக்கள் களமிறங்கி தேடலில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
சிறைச்சாலைக்கு பூனையில் கட்டி போதைப் பொருள் அனுப்புதல், கழுகு மூலம் போதைப் பொருள் கடத்தல் என பல அரிய கண்டுபிடிப்புகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment