நாட்டில் கஞ்சா உற்பத்தியை சட்டபூர்வமானதாக்கி அதனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தால் அதனூடாக கொளுத்த இலாபம் காணலாம் என தெரிவிக்கிறார் அமைச்சர் பந்துல குணவர்தன,
மருத்துவ குணமுள்ள கஞ்சா செடிகளுக்கு நல்ல கிராக்கி இருப்பதாகவும், இலங்கையில் அதன் உற்பத்தி இல்லாத காரணத்தினாலேயே நச்சுத் தன்மை வாய்ந்த கேரள கஞ்சா திருட்டுத் தனமாகக் கொண்டுவரப்படுவதாகவும் பந்துல விளக்கமளித்துள்ளார். இந்நிலையில், கஞ்சா இறக்குமதி செய்யும் பல நாடுகள் இருப்பதாகவும் அவற்றுக்கு ஏற்றுமதி செய்தாலேயே நாட்டுக்கு பெருமளவு வருமானம் கிடைக்கும் எனவும் அவர் தெரிவிக்கிறார்.
ஆதிக்கவாத நாடுகள் சிலவே கஞ்சாவை தடை செய்து வைத்திருப்பதாகவும் அதனைத் தொடர்ந்தும் பின்பற்றல் அவசியமா என்பது மீளாய்வு செய்யப்பட வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவிக்கிறார்.
No comments:
Post a Comment