அங்கொட லொக்கா என அறியப்பட்ட பிரபல பாதாள உலக பேர்வழி இந்தியாவில் கொலையானமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
இச்சம்பவத்தின் பின்னணியில் கோயம்புத்தூர் பொலிசார் இரு பெண்கள் உட்பட மூவரைக் கைது செய்துள்ளதாக அங்கிருந்து வெளியாகும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த நபரின் உடலத்தை எரிப்பதற்க ஆளடையாளத்தை மாற்றியமைத்ததாக குறித்த நபர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பிரதீப் சிங் என்ற பெயரில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே லொக்கா இறந்துள்ளதுடன், மரணத்தில் சந்தேகம் உள்ளதன் பின்னணியில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பொலிசார் விளக்கமளித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா பொலிசார் இவ்விவகாரத்தில் தகவல் பரிமாறிக் கொண்ட நிலையில், மரண விசாரணை கிரிமினல் குற்ற விசாரணையாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment