கஞ்சா பயிர்ச்செய்கைக்கு சட்ட அங்கீகாரம்: அமைச்சர் - sonakar.com

Post Top Ad

Wednesday, 19 August 2020

கஞ்சா பயிர்ச்செய்கைக்கு சட்ட அங்கீகாரம்: அமைச்சர்

இலங்கையில் கஞ்சா பயிர்ச்செய்கைக்கு சட்ட அங்கீகாரம் பெற்றுக் கொடுப்பதற்கான திட்டமொன்றை முன்னெடுக்கப் போவதாக தெரிவிக்கிறார் புதிதாக இராஜாங்க அமைச்சராக நியமனம் பெற்ற சிசிர ஜயகொடி.


சுதந்திரத்துக்கான தேசிய போராட்டத்தை முன்னெடுத்த பெருமைக்குரிய பெங்கமுவே நாலக ஹிமி மற்றும் சில புத்திஜீவிகளின் வேண்டுகோளுக்கிணங்க தான் இதற்கான முயற்சியை எடுக்கப் போவதாக தெரிவிக்கிறார் தேசிய வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர.


ஒரு சில உலக நாடுகளில் கஞ்சா பயிர்ச்செய்கை அனுமதிக்கப்பட்டுள்ள அதேவேளை, உள்நாட்டு மருத்துவத்துக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தகக்து.

No comments:

Post a Comment