8வது நாடாளுமன்றில் அங்கம் வகித்த திருகோணமலை மாவட்டத்தில் போட்டியிட்ட இம்ரான் மஹ்ரூப், வன்னி மாவட்ட காதர் மஸ்தான் மற்றும் அநுராதபுர மாவட்டத்தில் போட்டியிட்ட இஷாக் ரஹ்மான் ஆகியோர் மீண்டும் நாடாளுமன்றுக்குத் தெரிவாகியுள்ளனர்.
அத்துடன் திருகோணமலை மாவட்டம் எம்.எஸ். தௌபீக், அம்பாறை மாவட்டத்தில் பைசல் காசிம் மற்றும் முஹமத் ஹரீஸ் ஆகியோரும் மீண்டும் தெரிவாகியுள்ளனர்.
தேசிய காங்கிரஸ் அதாவுல்லாஹ்வுக்கும் மக்கள் வாய்ப்பளித்துள்ள அதேவேளை தேசியப் பட்டியல் ஊடாக இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment