நேற்றைய தினம் இலங்கையின் 9வது நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ளாத மரண தண்டனைக் கைதி பிரேமலால் ஜயசேகரவுக்கு இன்றும் இம்மாதம் 27 மற்றும் 28ம் திகதிகளில் இடம்பெறவுள்ள சபையமர்வுகளிலும் கலந்து கொள்வதற்கான ஆவன செய்யுமாறு சிறைச்சாலை நிர்வாகத்துக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேன்முறையீடு செய்திருக்கும் காரணத்தின் அடிப்படையில் குறித்த நபர் நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்ள சட்டத்தில் அனுமதியுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னுமொரு கைதியான பிள்ளையான் நேற்றைய அமர்வில் கலந்து கொண்டு 'உரை' யாற்றியிருந்தார்.
இந்நிலையில், பிறேமலால் ஜயசேகரவுக்காக நாடாளுமன்றிலிருந்து விசேட கோரிக்கை அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment