14ம் திகதிக்குள் தேசியப் பட்டியல் நியமனத்தை உத்தியோகபூர்வ ரீதியாக தேர்தல் ஆணையாளருக்கு அறிவிக்க வேண்டியுள்ள நிலையில், கட்சி முடிவெடுத்தும் ஞானசாரவின் பெயரை அறிவிப்பதில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
தேசியப் பட்டியலுக்காக ஞானசாரவும் அத்துராலிய ரதன தேரரும் முரண்பட்டுக் கொண்டிருந்த இடைவெளியில் தனது பெயரை தேசியப்பட்டியலுக்கு முன் மொழிந்து கடிதத்தை ஒப்படைத்துள்ளார் அபே ஜன பல கட்சியின் செயலாளர் படத்தில் காணப்படும் விமலதிஸ்ச தேரர்.
இந்நிலையில், அவரைக் கட்சியை விட்டு நீக்கியுள்ளதாக தெரிவிக்கின்ற போதிலும் அவர் ஏலவே கடிதத்தை ஒப்படைத்துள்ளதால் ஞானசாரவின் கனவுக்குத் தடங்கல் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment