ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் ஊடாக ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி மற்றும் பேருவளை மர்ஜான் பளீல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக நியமனம் பெற்றுள்ளனர்.
ஜி.எல். பீரிஸ், அஜித் நிவாத் கப்ரல், சுரேன் ராகவன், பேராசிரியர்கள் திஸ்ஸ விதாரன மற்றும் ரஞ்சித் பண்டார உள்ளடங்கலான புத்திஜீவிகளின் இப்பட்டியலில் விமல் வீரவன்சவின் முசம்மிலுக்கும் இடமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தேர்தலுக்கு முன்பாகவே அலி சப்ரி மற்றும் மர்ஜானின் நியமன வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை சமகி ஜன பல வேகயவின் தேசிய பட்டியல் விவகாரம் இறுதி முடிவை இன்னும் எட்டவில்லையென அறியமுடிகிறது.
No comments:
Post a Comment