முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் இரண்டாவது தடவையாக இம்முறையும் பொதுத் தேர்தலில் தோல்வியுற்றுள்ளார். கடந்த தடவை தோல்வியுற்றிருந்த போதிலும் தேசியப் பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் சென்ற அவர் பின்னர் கிழக்கு மாகாண ஆளுனராகப் பதவி வகித்திருந்தார்.
இதேவேளை முன்னாள் பிரதியமைச்சர் அமீர் அலி மற்றும் இராஜாங்க அமைச்சர் அலி சாஹிர் மௌலானா ஆகியோரும் தேர்தலில் தோல்வியுற்றுள்ள நிலையில் அந்த இடத்தை முன்னாள் கிழக்கு மாகாண முதல்வர் ஹாபிஸ் நசீர் நிரப்பியுள்ளார்.
கடுமையான போட்டிக்கு மத்தியில் 17,599 வாக்குகளைப் பெற்று ஹாபிஸ் நசீர் முதற்தடவையாக நாடாளுமன்றம் செல்கின்றமை குறிப்பிடத்தககது.
No comments:
Post a Comment