மிலிந்த மொரகொடவுக்கு உயர்ஸ்தானிகர் பதவி: அரசு முஸ்தீபு - sonakar.com

Post Top Ad

Saturday, 29 August 2020

மிலிந்த மொரகொடவுக்கு உயர்ஸ்தானிகர் பதவி: அரசு முஸ்தீபு

முன்னாள் அமைச்சர் மிலிந்த மொரகொடவுக்கு உயர்ஸ்தானிகள் பதவியொன்றை வழங்கி கௌரவப்படுத்த ஆளுந்தரப்பு முயன்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


வெளியுறவுத்துறை அமைச்சின் அனுமதியின்றி இரு நாட்டு விவகாரங்களில் நேரடி பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் அதிகாரம் கொண்ட வகையில் அவரை இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராக நியமிப்பதற்கே திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


மிலிந்த மொரகொட சட்ட - ஒழுங்கு அமைச்சராக பதவி வகித்த காலத்திலேயே முஸ்லிம் விவாக - விவாகரத்து சட்டத்திருத்தத்துக்கான குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தமை நினைவூட்டத்தக்கது.

No comments:

Post a Comment