இரு கட்சிகளின் ஆதரவாளர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று நேற்று மாலை (5) இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பகுதியில் வைத்து இரு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களுக்கிடையே இம்மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தடிகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்ட இச்சம்பவத்தில் நால்வர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் அதில் இருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
-எச்.எம்.எம்.பர்ஸான்
No comments:
Post a Comment