இம்முறை பொதுத் தேர்தலில் தேசியப் பட்டியல் ஊடான மூன்று முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர். நீண்டகாலமாக மஹிந்த ஆதரவாளர்களாக செயற்பட்டு வரும் மர்ஜான் பளீல், ஜனாதிபதியின் நெருங்கிய தோழர் அலி சப்ரி மற்றும் சஜித் பிரேமதாசவின் நீண்ட நாள் சகாவும் ஆலோசகருமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் ஆகியோரே அவர்கள்.
பெரமுன சார்பில் அலி சப்ரி மற்றும் மர்ஜானுக்கு தேசியப் பட்டியல் வழங்கப்படும் என ஏலவே வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் காலங்களில் குறித்த தரப்பினர் தெரிவித்து வந்தனர். இதேவேளை, 60 ஆசனங்களைப் பெறின், சமகி ஜன பல வேகய தேசியப் பட்டியல் ஊடாக இம்தியாஸ் பாக்கீர் மார்க்கார் தவிரவும் அசாத் சாலிக்கும் நியமனம் எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் சமகி ஜன பல வேகயவுக்கு 7 தேசியப் பட்டியல் ஆசனங்களும், பெரமுனவுக்கு 17 ஆசனங்களும் கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment