டுபாயிலிருந்து நாடு திரும்பி, கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்த பெண்ணொருவருக்கு பிரசவம் நிகழ்ந்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவருக்கு பிரசவம் நிகழ்வது முதற்தடவையென்பதால் குழந்தையை பாதுகாப்பாக சிசேரியன் முறையில் வெளியெடுக்கும் பணியில் பல்வேறு மருத்துவ நிபுணர்கள் உட்பட 35 பேர் பங்கேற்றதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
தாயும் சேயும் நலமாக உள்ள அதேவேளை, பிறந்த குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் அடிப்படையில் குழந்தைக்கு கொரோனா தொற்று இல்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment