முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலியின் நாவல அலுவலகம் மீது கல் வீசித் தாக்குதல் நடாத்திய சம்பவம் ஒன்று சற்று முன் இடம்பெற்றுள்ளது.
முச்சக்கர வண்டியொன்றில் வந்த இனந்தெரியாத நபர்கள் இத்தாக்குதலை மேற்கொண்டுள்ள அதேவேளை அலுவலகத்தில் அச்சமயம் இருந்த நபர் மற்றும் அயலவர்கள் வரவே அங்கிருந்து குறித்த நபர்கள் தப்பியோடியுள்ளதாக இது குறித்து வினவிய போது அசாத் சாலி சோனகர்.கொம்மிடம் தெரிவித்தார்.
இந்நிலையில், தற்சமயம் அங்கு பொலிசார் வருகை தந்துள்ளதுடன் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment