இலங்கையின் கிரிக்கட் நட்சத்திரங்களான முத்தையா முரளிதரன் மற்றும் சனத் ஜயசூரிய பொகவந்தலாவயில் வைத்து பிறிதொரு அரசியல் கட்சியினரால் மிரட்டப்பட்டதாக முரளி தகவல் வெளியிட்டுள்ளார்.
முரளிதரனின் சகோதரன் தேர்தலில் போட்டியிடும் நிலையில் அவரை ஆதரித்து பொகவந்தலாவ சென்றிருந்த வேளையிலேயே தம்மை மறித்து இங்கு வருவதற்கு நீங்கள் யார்? இது எங்கள் ஊர், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என மிரட்டப்பட்டதாகவும் அதற்கு இந்த நாடு எனக்கும் சொந்தம் என தான் பதிலளித்ததாகவும் முரளி விளக்கமளித்துள்ளார்.
நுவரெலியவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் வைத்தே முரளி இத்தகவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment