புராதன கட்டிடத்தை இடித்த குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள குருநாகல் மேயர் துஷார சஞ்சீவ உட்பட ஐவரைக் கைது செய்வதற்கு தேவையான நடவடிக்கை எடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார் சட்டமா அதிபர்.
புவனேகபாகு மன்னனின் அரச மண்டபம் என நம்பப்பட்டு வந்த கட்டிடமே இடிக்கப்பட்டுள்ள அதேவேளை, தமது கட்சிக்காரரைக் காப்பாற்ற விளக்கமளித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச, அந்த மன்னனுக்கு முஸ்லிம் மனைவியொருவர் இருந்ததாக தேர்தல் பிரச்சாரத்தின் போது விளக்கமளித்திருந்தார்.
இந்நிலையில், குறித்த கட்டிடம் 1800 களில் புவனேகபாகு என்ற பெயர் கொண்ட ஒருவரினால் கட்டப்பட்டதேயன்றி மன்னனால் கட்டப்பட்டதன்று என பெரமுன சார்ப்பு பௌத்த பிக்குகளும் விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment