2020 பொதுத் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி படு தோல்வியை சந்தித்துள்ளது.
கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, செயலாளர் அகில விராஜ் காரியவசம், மக்கள் சேவகன் பாலித தெவரப்பெரும உட்பட கட்சி முக்கியஸ்தர்கள் எவருமே வெற்றி பெறத் தவறியுள்ள நிலையில் 249,435 மொத்த வாக்குகளையே அக்கட்சி பெற்றுள்ளது.
கட்சிக்குள் ஏற்பட்ட அதிகாரப் போட்டியின் காரணமாக சஜித் பிரேமதாச தலைமையில சமகி ஜன பல வேகய தனித்துப் போட்டியிருந்ததோடு 50க்கு மேற்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஜித்தோடு கை கோர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment