பிரபல பாதாள உலக பேர்வழி அங்கொட லொக்காவினால் போதைப் பொருள் கடத்துவதற்காகப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் கழுகு அண்மையில் கைப்பற்றப்பட்டிருந்தது.
இந்நிலையில் அதனை தெஹிவளை மிருகக் காட்சி சாலையில் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளது நீதி மன்றம்.
அத்துருகிரிய பொலிசாரினால் நீதிமன்றுக்குக் கொண்டுவரப்பட்டிருந்த குறித்த பறவை மூலமாக ஒரு தடவையில் 15 கிலோ கிராம் பொருள் காவிச் சென்றிருக்க முடியும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment